வேலூர் மாவட்டத்தில் 5 எம்.எல்.ஏ பதவிக்கு 116 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல்.

வேலூர் மாவட்டத்தில் 5 எம்.எல்.ஏ பதவிக்கு  116 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல்.
X
வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிக்கு எம்.எல்.ஏவாக அரசியல் கட்சிகள் உட்பட 116 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

வேலூரில் காட்பாடி, வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம்(தனி), கே.வி. குப்பம்(தனி) உள்ளிட்ட ஐந்து தொகுதிகள் உள்ளது. இந்த 5 தொகுதிகளில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என அரசியல் கட்சிகள் உள்பட 116 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர்.

2021ம் ஆண்டிற்கான தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவினை தாக்கல் செய்ய வேண்டிய கடைசி நாளான நேற்று (மார்ச். 19) வரை வேலூரில் மொத்தம் 116 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர்.

காட்பாடி தொகுதியில் 22 பேரும், வேலூர் தொகுதியில் 24 பேரும், அணைக்கட்டு தொகுதியில் 23 பேரும், குடியாத்தம்(தனி) தொகுதியில் 28 பேரும், கே.வி. குப்பம்(தனி) தொகுதியில் 19 பேரும் வேட்பு தாக்கல் செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் அதிகபட்சமாக குடியாத்தம்(தனி) தொகுதியில் 28 வேட்பு மனுக்களும், குறைந்தபட்சமாக கே.வி. குப்பம்(தனி) தொகுதியில் 19 வேட்பு மனுக்கலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.




Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!