வேலூர்: 40% பேருந்துகள் இயக்கம்

வேலூர்: 40% பேருந்துகள் இயக்கம்
X
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால், 40% பேருந்துகள் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசு போக்குவரத்து ஊழியர்களின் தொழிற் சங்கத்தை சேர்ந்த சுமார் 7 தொழிற் சங்கங்கள் பல்வேறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விழுப்புரம் போக்குவரத்து கழகத்திற்குட்பட்ட வேலூர் மண்டலத்தின் கீழ் இயங்கும் 10 பணிமனைகளில் இருந்து 40% பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் வேலூர் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மிக குறைந்த அளவுக்கான அரசு பேருந்து இயக்கப்படுகிறது. தனியார் பேருந்துகள் அதிகம் இயக்கப்பட்டு வருகிறது. கர்நாட மற்றும் ஆந்திராவை சேர்ந்த அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்