வேலூர் மாவட்டத்தில் 193 பதற்றமான வாக்கு சாவடியில் துணை ராணுவம் பாதுகாப்பு
வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதில் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்ட 193 வாக்குச்சாவடிகளை வேலூர் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சண்முகசுந்தரம், எஸ்.பி செல்வகுமார் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து அங்கு மேற்க்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சண்முகசுந்தரம் அளித்த பேட்டியில் கூறியதாவது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 1753 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 193 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. அங்கெல்லாம் தற்போது நேரில் ஆய்வு மேற்க்கொண்டு வருகிறோம். பதற்றமான வாக்குச்சாவடிகளில் பொது மக்கள் எந்தவிதமான பதற்றத்திற்க்கும் உள்ளாகாமல் வாக்களிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் பதற்றாமான வாக்குச்சாவடிகளில் மத்திய துணை ரணுவத்தினர், தேர்தல் நுண் பார்வையாளர்கள் போடப்பட்டுள்ளனர்.
மேலும் 1013 வாக்குச்சாவடி மையங்கள் சிசிடிவி வெப் கேமிரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. இது தவிர தமிழ்நாடு காவல் துறையில் உள்ள காவலர்களை கொண்டு குய்க் ரியாக்சன் (னிஹிமிசிரி ஸிணிகிசிஜிமிளிழி ஜிணிகிவி) டீம் குழுவை உருவாக்க இருப்பதாகவும். மாவட்டம் முழுவதும் 5 மாதிரி வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளது. ஆகவே எதிர்வரும் ஏப்ரல் 6 சட்டமன்ற பொது தேர்தல் எந்தவித அசம்பாவிதங்கள் இன்றி சுமூகமாக நடைபெற மாவட்ட நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்க்கொண்டு வருவதாக கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu