வன்முறையை பரப்பும் யூ டியுப் - தடை செய்ய தமிழக முதல்வருக்கு கோரிக்கை.
ஆபாசம் மற்றும் வன்முறையை பரப்பும் யூ டியுப் சேனல்களை தடை செய்ய கோரி சர்வதேச மக்கள் கண்காணிப்பகம் தமிழக முதல் வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பகுதியில் உள்ள அலுவலகத்தில் சர்வதேச மக்கள் கண்கானிப்பகத்தின் மாநில மகளிர் அணி தலைவி "கிரிஜா சிவசங்கர்" செய்தியாளர்களை சந்தித்தார்.
தற்போது கொரானாவை விட வேகமாக யூ-டியுப் சேனல்கள் மக்களை சீரழித்து வருகின்றது. இந்தியாவில் தமிழகம் கலாச்சாரம் மிகுந்த மாநிலம் ஆகும். வெளிநாட்டு பயணிகள் இந்தியாவில் தமிழகத்திற்க்கு வருவதையே விரும்புகின்றனர்.
ஆனால் சமிபத்தில் ஒரு வெளிநாட்டு பெண்மணி யூடியுப் - ல் வரும் ஆபாசம் மற்றும் வன்முறைகளை பார்த்து விட்டு தமிழ்நாட்டிற்க்கு எங்கள் மக்களை அனுப்பவே பயமாக உள்ளது என்று கூறிஉள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு யூடியுப் சேனலை பார்த்து நாட்டு வெடிகுண்டு செய்து அதை வெடிக்க வைத்த இரண்டு சிறுவர்கள் சிறையில் உள்ளனர். அந்த அளவிற்க்கு யூடியுப் சேனல் தற்போது தமிழ்நாட்டை அழித்து வருகிறது.
இரண்டு தனிப்பட்ட நபர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஒரு வரை ஒருவர் அவமானபடுத்துவதாக நினைத்து கொண்டு இரண்டு தரப்பினரும் ஆபாச பேச்சுகள் மற்றும் காதில் கேட்கபடாத வார்த்தைகளால் மோதி கொண்டு அதை யூடியுப் சேனலில் பதிவு ஏற்றம் செய்து விடுகின்றனர். இதை பார்த்து பெண்களும் இளைய தலைமுறையினரும் கலாச்சார அழிவில் படு பதாளத்தில் சென்று கொண்டு உள்ளனர்.
எனவே தமிழக முதல்வர் உடனடியாக இதில் தலையிட்டு மத்திய அரசை வலியுருத்தி ஆபாச யூடியுப் சேனல்களை தடை செய்தும், யூடியுப் சேனலை தொடங்க அரசிடம் முறையாக அனுமதி பெற வேண்டும், அப்படி அனுமதி பெற்ற யூடியுப் சேனல்களில் சினிமா மற்றும் சின்னதிரை -யில் உள்ளது போல் சென்சார் போர்டு அமைத்து தமிழக மக்களை காப்பாற்ற வேண்டும் என்று தமிழக முதல் வருக்கு கோரிக்கை வைத்தார். பேட்டியின் போது நதி நீர் இணைப்பு "பாசமழை பார்த்திபன்", உறுப்பினர்கள் மலர்வண்ணன்,வள்ளிபாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu