விழிப்புணர்வுக்காக வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

விழிப்புணர்வுக்காக வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
X

வேலூரில் பொதுமக்களின் விழிப்புணர்வுக்காகவும், தேர்தல் பணியாளர்களின் பயிற்சிக்காகவும் தலா 10 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் வைப்பறையிலிருந்து தேர்தல் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களின் பயிற்சிக்காகவும், பொதுமக்களின் விழிப்புணர்வுக்காகவும் வேலூர் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா பத்து வாக்குப்பதிவு இயந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சண்முகசுந்தரம் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வழங்கினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!