தேர்தலுக்கான ஊடக மையம் திறப்பு

தேர்தலுக்கான ஊடக மையம் திறப்பு
X
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த தேர்தலுக்கான ஊடக மையத்தினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த தேர்தலுக்கான ஊடக மையத்தினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

2021 தமிழக சட்டமன்ற பொது தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது. இந்நிலையில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாங்கள் செய்யக்கூடிய செலவிற்கு கணக்கு காட்டி வேண்டும் என்பது தேர்தல் நடத்தை விதிமுறை. அதன் அடிப்படையில் காட்சி ஊடகங்களில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் யாரேனும் முன் அனுமதி இன்றி தேர்தல் செலவை மறைக்கும் நோக்கில் விளம்பரம் செய்கின்றனரா என்பதையும், சட்ட ஒழுங்கை பாதிக்கும் உள்ளூர் நிகழ்வுகள், அரசுக்கு எதிரான செய்திகள் ஆகியவற்றை கண்காணிக்கும் வண்ணம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நான்காவது தளத்தில் நான்கு எல்.இ.டி டிவியுடன் கூடிய தேர்தலுக்கான பிரத்தியேக ஊடக மைய அறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கியமான காட்சி ஊடகங்கள், வேலூரில் ஒளிபரப்பாகக் கூடிய உள்ளூர் காட்சி ஊடகங்கள் ஆகியவை இங்கு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. மொத்தம் 9 பேர் சுழற்சி முறையில் கண்காணித்து வருகின்றனர். இதற்கான அறிக்கையை வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவரிடம் ஒப்படைக்கின்றனர். இந்த கண்காணிப்பு அறையை இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது நான்கு டிவிகளுடன் கண்காணித்தால் சிரமமாக இருக்கக்கூடும் என்றும் கூடுதலாக மூன்று டிவிக்கள் வைத்து கண்காணிக்கும்படி அறிவுறுத்தினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!