தேர்தல் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம்

தேர்தல் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம்
X
வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்ற உள்ள ஊழியர்களுக்கான பயிற்ச்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

அதிகாரிகளுக்கான பயிற்ச்சி மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியர் சண்முகசுந்தரம் பேசுகையில், "கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் அதிகாரிகள் பணி நேரம் முடிந்து அடுத்த பணிக்கு வருபவர்கள் வரும்வரை காத்திருக்க வேண்டும். புகார்கள் வந்தால் அது எந்த தொகுதி, முகவரி என தெளிவாக கேட்டு எழுத வேண்டும். குறிப்பாக புகார் வரும் நேரம் குறித்தும் எழுத வேண்டும்‌. சம்பந்தப்பட்ட புகாரை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் எந்த தொகுதி பறக்கும் படையினருக்கு என பார்த்து தகவல் தெரிவித்து புகார் தெரிவித்த நேரத்தையும் குறிப்பிட வேண்டும். அவர்கள் அந்த புகார் மீது எடுத்த நடவடிக்கை நேரமும் குறிப்பிட வேண்டும். புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்காத பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக புகார் தருபவர்களின் பெயர், முகவரிகளை கேட்டு கட்டாயப்படுத்தக்கூடாது. ஒரு சிலர் பெயர் முகவரிகளை தர முன்வந்தால் அவர்களின் விவரங்களையும் ரகசியமாக வைக்க வேண்டும். கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்கள் குறித்து தேர்தல் அலுவலர் அலுவலகத்திலும் தெரிவிக்கப்படும். கண்காணிப்பு குழுவினர் விரைவாக வேலை வாங்க வேண்டும். குறிப்பாக தினமும் வரும் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து என்னிடம் கையொப்பம் பெற வேண்டும். கட்டுப்பாட்டுக்கு வரும் புகார்கள் அனைத்தையும் தமிழில் எழுத வேண்டும் என ஆட்சியர் சண்முகசுந்தரம் பேசினார். இதில் அரசு அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றுவார்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையையும் திறந்து வைத்தார்.

Tags

Next Story