சிலிண்டருக்கு மாலை அணிவித்து திமுக போராட்டம்

சிலிண்டருக்கு மாலை அணிவித்து திமுக போராட்டம்
X

பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து சிலிண்டருக்கு ஒப்பாரி வைத்து வேலூரில் தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சமீப காலமாக தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் மீதான விலை ஏற்றத்தை கண்டித்து வேலூர் மாவட்ட தி.மு.க சார்பில் வேலூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் நந்தகுமார் தலைமையில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வேலூர் எம்.எல்.ஏ கார்த்திகேயன், அணைக்கட்டு எம்.எல்.ஏ நந்தகுமார் உள்ளிட்ட சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், ஒப்பாரி வைத்தும், இருசக்கர வாகனம் மற்றும் காருக்கு மாலை அணிவித்து நுாதன முறையில் கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

Tags

Next Story
ராசிபுரம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆட்சியர் கட்டளை..!