பட்டாசு விற்பனையை தடை செய்ய வேண்டும்-துரைமுருகன்

பட்டாசு விற்பனையை தடை செய்ய வேண்டும்-துரைமுருகன்
X

பட்டாசு விற்பனையை தடை செய்ய வேண்டும் என காட்பாடியில் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறினார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதிக்குட்பட்ட காங்கேயநல்லூர், விருதம்பட்டு ஆகிய பகுதிகளில் தி.மு.க சார்பில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற மக்கள் சபை கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் பட்டாசு தொழிற்சாலை விபத்தில் 19 பேர் உயிரிழந்தது குறித்து கேட்டதற்கு, பட்டாசு தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கான குழந்தைகள், பெரியவர்கள் ஈடுபட்டுள்ளனர்.அதற்கு மாற்று தொழிலை ஏற்படுத்த வேண்டுமே தவிர ஒவ்வொரு வருடமும் இது போன்ற உயிரிழப்பு ஏற்படுவது மிகப்பெரிய கொடுமை. ஆகவே பட்டாசு விற்பனையை தடைசெய்ய வேண்டும் என்று கூறினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்