ஆந்திராவிற்கு கடத்த முயன்ற ரேசன்அரிசி பறிமுதல்
பள்ளிகொண்டாவில் பறக்கும் படை வாகன சோதனையின் போது சிக்கிய 16 டன் அளவிலான ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில், அவரது வழிகாட்டுதலின் பேரில் வேலூர் மாவட்ட உணவு பொருள் பாதுகாப்பு துறை ஆய்வாளர் அடங்கிய குழு மற்றும் பறக்கும் படை தாசில்தார் கோடீஸ்வரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே சர்வீஸ் சாலையில் இன்று(பிப். 12) நள்ளிரவு 1 மணி அளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வேலூரில் இருந்து சித்தூர் நோக்கி சென்ற தமிழக பதிவு எண் கொண்ட லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் சுமார் 16 டன் அளவிலான ரேஷன்அரிசி இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து உணவு பொருள் பாதுகாப்பு துறையினர், லாரியை ஓட்டி வந்த திருவள்ளூர் மாவட்டம் அரும்பாக்கத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் லோகநாதன் என்பவரை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பிடிபட்ட 16 டன் ரேசன் அரிசி தொரப்பாடியில் உள்ள அரசு தானியக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu