வேலூர் மாவட்டத்தில், ‘நீட்’ தேர்வு எழுதிய 6,703 பேர்
Vellore News.Vellore News Today-வேலூர் மாவட்டத்தில், இன்று 6,703 பேர் நீட் தேர்வு எழுதினர்.
Vellore News.Vellore News Today- நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த மார்ச் மாதம் 6-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி வரை நடைபெற்றது. நாடு முழுவதும், 21 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அறிவித்தபடி நேற்று நீட் தேர்வு நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் வேலூர் சாய்நாதபுரம் வி.வி.என்.கே.எம். சீனியர் செண்டரி பள்ளி, டி.கே.எம்.கல்லூரி, ஸ்ரீபுரம் நாராயணி வித்யாஷ்ரம் சீனியர் செகண்டரி பள்ளி, சன்பீம் மெட்ரிக் பள்ளி, சிருஷ்டி வித்யாஷ்ரம் பள்ளி, சிருஷ்டி மெட்ரிக் பள்ளி, கிங்ஸ்டன் என்ஜினீயரிங் கல்லூரி, சென்னாங்குப்பம் வித்யாலட்சுமி பள்ளி ஆகிய 8 மையங்களில் நீட் தேர்வு நடந்தது.
இந்த மையங்களில் 5,225 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டன. காலை 11 மணி முதல் மாணவ- மாணவிகள் சோதனை செய்யப்பட்டு மாயங்கலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது தேர்வர்கள் கம்மல், வாட்ச், செயின் போன்ற அணிகலன்கள் அணிந்து செல்லவும், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கொண்டு செல்லவும் அனுமதிக்கப்படவில்லை. துப்பட்டா அணிந்து செல்லவும் அனுமதிக்கவில்லை. எனவே நுழைவு வாயில் பகுதியில் மாணவிகள் தங்களது அணிகலன்களை கழற்றி பெற்றோரிடம் கொடுத்தனர்.
ஹால்டிக்கெட், 2 புகைப்படம், அங்கீகரிக்கப்பட்ட ஆதார் போன்ற அடையாள அட்டை, சானிடைசர், ஸ்டிக்கர் ஒட்டப்படாத தண்ணீர் பாட்டில் இவற்றை மட்டும் கொண்டு செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுதும் மாணவர்களை பெற்றோர் முத்தம் கொடுத்தும், கை குலுக்கியும் மையத்துக்குள் அனுப்பி வைத்தனர். தேர்வு மையத்துக்குள் சென்ற மாணவ- மாணவிகளை மறுபரிசோதனை செய்து தேர்வு எழுத அனுமதித்தனர்.
சில தேர்வர்கள் புகைப்படம் கொண்டு வராமல் இருந்தனர். பின்னர் பெற்றோரை தொடர்பு கொண்டு புகைப்படம் பெற்றனர். புகைப்படம் இல்லாத தேர்வர்களுக்கு தேர்வு மையத்தில் பிரத்யேகமாக புகைப்படம் எடுத்து கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தேர்வு பிற்பகல் 2 மணி அளவில் தொடங்கியது. சில மையங்களில் தேர்வர்களின் பசியை போக்க பிஸ்கெட், டீ வழங்கப்பட்டது. அனைத்து தேர்வு மையத்திலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். வேலூர் சாய்நாதபுரத்தில் தேர்வு மையத்தில் டிஎஸ்பி திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. மாலை 5.20 மணி அளவில் தேர்வு முடியும் என்பதால் தேர்வர்களின் குடும்பத்தினர் சாலையோரமும் மற்றும் அருகில் இருந்த கோவில் வளாகத்தில் காத்திருந்தனர்.
தேர்வினையொட்டி சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களில் 6,863 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில் 6,703 பேர் தேர்வு எழுதினர். 160 பேர் தேர்வு எழுதவில்லை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu