‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயிற்சி வகுப்புகளில் சேர கலெக்டர் அழைப்பு

‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயிற்சி வகுப்புகளில் சேர கலெக்டர் அழைப்பு
X

Vellore News.Vellore News Today-- வேலூர் மாவட்டத்தில், ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயிற்சியில் சேர அழைப்பு (கோப்பு படம்)

Vellore News,Vellore News Today-மத்திய அரசின் போட்டித்தேர்வுக்கு, ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக, கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Vellore நியூஸ்,Vellore News Today - மத்திய அரசின் போட்டித்தேர்வுக்கு ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தால், ஸ்டாப் செலக்சன் கமிஷன் போட்டி தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் நாடு முழுவதும் காலியாக உள்ள 7 ஆயிரத்து 500 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வு எழுதுவோருக்கு தமிழ்நாடு அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், தற்போது இலவச பயிற்சி வகுப்புகள் அளிக்கப்பட உள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படம், எஸ்.எஸ்.சி. (சி.ஜி.எல்.) போட்டித்தேர்வுக்கு விண்ணப்பித்தற்கான சான்று மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பங்களை https://docs.google.com/forms/d/e/1FAlpQLSf2ce9CL2TN7mal6VA9ZunCLjjX4uOfNxUtQ4WQtfQmkjNZjg/viewform என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். இந்த பயிற்சி வகுப்புகளில் மத்திய அரசு பணிகளுக்கு தயாராகி வரும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த வேலை தேடும் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என

கலெக்டர் குமாரவேல் அதில் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு கைகொடுத்து உதவும் ‘நான் முதல்வன்’ திட்டம்

தமிழ்நாட்டு இளைஞர்களைக் கல்வியில், அறிவில், ஆற்றலில், தனித்திறமைகளில் தலைநிமிர்ந்து நிற்க வைக்க தமிழக அரசால் தொடங்கி வைக்கப்பட்ட திட்டம்தான் நான் முதல்வன் திட்டம். தமிழகத்தின் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய 'நான் முதல்வன்' என்கிற புதிய திட்டத்தை கடந்த மார்ச் 1ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் சிறப்பம்சமானது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு, அதனை மேலும் ஊக்குவித்து, அடுத்து அவர்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படிப் படிக்கலாம் என்று வழிகாட்டுவதுடன், தமிழில் தனித் திறன் பெறவும், சிறப்புப் பயிற்சியுடன் ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாகப் பேசவும், நேர்முகத் தேர்வுக்கு தயாராவதற்கும் பயிற்சிகள் வழங்கப்படும்.

‘நான் முதல்வன்’ திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் இணையதளமானது, தமிழக இளைஞர்கள் வளர்ந்து வரும் தொழில் நுட்பத்திற்கேற்ப தனித்திறன்களை வளர்த்துக் கொள்ளும் வகையில் இலவச திறன் பயிற்சிகள், குறைவான கட்டணத்துடன் கூடிய திறன் பயிற்சிகள், பாடத்திட்டத்துடன் கூடிய திறன் பயிற்சிகள் மற்றும் பாடத்திட்டத்துடன் இணைக்கப்படவுள்ள திறனெய்தும் தொழில்நுட்ப பாடங்கள், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள், ஆங்கிலம், ஜப்பானிய, ஜெர்மன் மொழித்திறன் பயிற்சிகள், ஆளுமைத்திறன் பயிற்சிகள், உயர் கல்விக்கான நுழைவுத்தேர்வு பயிற்சிகள் என அனைத்தும் ‘நான் முதல்வன்’ இணையதளத்தின் மூலம் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நவீன தொழில் நுட்பங்கள் இதன்மூலம் கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்கள் நவீன தொழில் நுட்பங்களில் விருப்பத்திற்கேற்ற வேலைவாய்ப்பினை பெறும் வகையிலான குறுகிய கால பயிற்சிகளை தெரிவு செய்து உலகத்தரத்திலான பயிற்சிகளையும் அதற்குரிய சான்றிதழ்களையும் பெறலாம். இதற்கான இலவச படிப்புகள், குறைவான கட்டணத்துடன் கூடிய படிப்புகள் மற்றும் பாடத்திட்டத்துடன் படிப்புகள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்