வேலூர் பன்னோக்கு மருத்துவமனை பணிகள் விரைந்து முடிக்கப்படும்: அமைச்சர் எ.வ.வேலு
மருத்துவமனை கட்டுமான பணிகள்
வேலூர் பெண்ட்லேன்ட் மருத்துவமனை பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுகிறது. இந்த கட்டிடப் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில், வேலூர் மாவட்டத்தை எனது சொந்த மாவட்டமாக கருதுகிறேன். இங்குள்ள பெண்ட்லேன்ட் மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என அப்போது எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்த கார்த்திகேயன் கோரிக்கை வைத்தார்.
இதை எதிர்க்கட்சி தலைவராக இருந்த தற்போதைய தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் வலியுறுத்தினார். ஆனால் பணிகள் நடைபெறவில்லை தொடர்ந்து ஆட்சி பொறுப்பு ஏற்ற பின்னர் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தற்போது ரூ.150 கோடியில் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. பணிகள் விரைந்து முடிக்க 3 பகுதிகளாக பிரித்து கொடுக்கப்பட்டு உள்ளது இங்கு தரைத்தளம் தவிர்த்து 7 மாடி கட்டிடம் உருவாகிறது.
18 மாதத்திற்குள் பணியை முடிக்க தெரிவித்துள்ளோம். இப்பணிகள் 3-3 2025குள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
மேலும் இங்கு ஆய்வு கூடம் ஒன்று அமைக்க உத்தரவிட்டேன்.அதன் மூலம் மணல், தண்ணீர், கம்பிகளின் தரம் குறித்து ஆய்வு செய்யப்படும்.இங்கு நடைபெறும் பணிகளை ஆய்வு செய்துள்ளேன். பணிகள் விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளேன்.
முதலமைச்சர்ஸ்டாலின் உத்தரவின்பேரில் பொதுப்பணித்துறை சார்பில் பல்வேறு பணிகள் விரைந்து முடிக்கப்பட்டுள்ளன.
வேலூர்-விரிஞ்சிபுரம் பாலாற்றில் மேம்பாலம் கட்டுவதற்கான திட்டங்கள் மதிப்பீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது திட்டம் மதிப்பீடு பணிகள் முழுமை பெற்ற பின்னர் தொடர்ந்து முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
மேலும் தமிழகத்தில் உள்ள ரயில்வே கிராசிங் பகுதிகளில் மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல இடங்களில் நிலம் கையகப்படுத்துவதில் 10 ஆண்டுகளாக காலதாமதம் ஏற்பட்டு வந்தது. அது குறித்து ஆய்வு செய்து பணிகள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கையகப்படுத்தும் பணிகள் விரைந்து முடிக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்காக சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்கள் 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் கார்த்திகேயன், தேவராஜ், வில்வநாதன், மாநகராட்சி மேயர் சுஜாதா, கமிஷனர் ஜானகி ரவீந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu