வேலூர் மாநகராட்சி பகுதிகளில் ரூ.5கோடியில் 953 நவீன கண்காணிப்பு கேமராக்கள்

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் ரூ.5கோடியில் 953 நவீன கண்காணிப்பு கேமராக்கள்
X

வேலூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சிசிடிவி கேமரா பொருத்தும் பணிகள் நடைபெறுகிறது.

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் ரூ.5கோடியில் 953 நவீன கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் ரூ.4.6கோடியில் 953 நவீன கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பனி நடைபெற்று வருகிறது.

வேலூர் மாநகராட்சியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மாநகராட்சியில் திருட்டு, வழிப்பறி, விபத்துகள் போன்றவையும் அதிகமாக நடைபெறுகிறது. எனவே, மாநகராட்சியில் பாதுகாப்பு கட்டமைப்பை அதிகப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி வேலூர் மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. வேலூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஏராளமான கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. எனினும் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டியது அவசியமாகிறது.

எனவே, இதற்காக ரூ.4 கோடியே 60 லட்சம் மதிப்பில் மாநகராட்சி முழுவதும் 953 கேமராக்கள் உயர் கோபுரத்தில் பொருத்தப்பட உள்ளது. இப்பணியை முன்னிட்டு முன்னோட்டமாக வேலூர் -ஆற்காடு சாலை சைதாப்பேட்டை முருகன் கோவில் அருகிலும், கலெக்டர் அலுவலகம் அருகிலும் உயர்கோபுர கம்பத்தில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. இதன் சோதனை ஓட்டம் தொடங்கியது.

மாநகராட்சி பொறியாளர் சீனிவாசன், திட்ட மேலாளர் மோகன்குமார், இளநிலை பொறியாளர் ஆல்பர்ட் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!