கோர்ட்டு பணிகளுக்கான எழுத்து தேர்வு: வேலூரில் 8,814 பேர் எழுதினர்
வேலூரில் நீதிமன்ற பணியிடங்களுக்கான எழுத்து தேர்வில் பங்கேற்றவர்கள்
தமிழகத்தில் உள்ள அனைத்து கீழமை கோர்ட்டுகளில் அலுவலக உதவியாளர், சுகாதார பணியாளர், இரவு காவலர், மசால்ஜி, துப்புரவு பணியாளர் உள்பட 3,557 காலி பணியிடங்கள் காணப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த 9-ந் தேதி வரை இணையதளம் மூலம் பெறப்பட்டன.
இந்த நிலையில் முதற்கட்டமாக அலுவலக உதவியாளர், இரவு காவலர் ஆகிய பணிகளுக்கான எழுத்துத்தேர்வு இன்று நடைபெற்றது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த 12,917 பேர் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்திருந்தனர். அவர்கள் தேர்வு எழுத காட்பாடியில் உள்ள வி.ஐ.டி. பல்கலைக்கழகம், கிங்ஸ்டன் என்ஜினீயரிங் கல்லூரி, சன்பீம் மேல்நிலைப்பள்ளி ஆகிய தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது.
சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி வசந்தலீலா மேற்பார்வையில் தேர்வு காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணிக்கு நிறைவடைந்தது. இதில், 8,814 பேர் தேர்வு எழுதினார்கள். 4,103 பேர் பங்கேற்கவில்லை. தேர்வு அறை, தேர்வு மையங்களை கண்காணிக்கும் பணியில் நீதிபதிகள் உள்பட 800-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருந்தனர்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) துப்புரவு பணியாளர், சுகாதார பணியாளர் உள்ளிட்ட பணி களுக்கான எழுத்துத்தேர்வு நடைபெற உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu