வேலூர் : 110.1 டிகிரி பாரன்ஹீட் அளவை தொட்டது வெயில்

வேலூர் : 110.1 டிகிரி பாரன்ஹீட் அளவை தொட்டது வெயில்
X
வேலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயில். இந்த ஆண்டின் அதிகபட்சமாக 110.1 டிகிரி பெரன்ஹீட் அளவை தொட்டது வெயில்.

கோடை காலம் துவங்கியது முதல் நாளுக்கு நாள் வேலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இன்று இந்த ஆண்டின் அதிகபட்சமாக 110.1 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன் 106.3 டிகிரி பாரன்ஹீட், நேற்றைய முன்தினம் 106.7 டிகிரி பாரன்ஹீட், நேற்று 109.2 டிகிரி பாரன் ஹீட்டாக இருந்த வெயில் அளவு இன்று 110.1 டிகிரி பாரன் ஹீட்டாக பதிவாகியுள்ளது.

அதிகபடியான வெப்பம் காரணமாக சாலைகளில் அனல் காற்று வீசுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் அதிகபடியான வெப்பம் காரணமாக மதிய வேளைகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர். பகலில் கொளுத்தும் வெயிலால் இரவிலும் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!