ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
X

வேலூர் ஸ்மார்ட் சிட்டி பணிகளை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் ஆய்வு செய்தார்

வேலூரில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவு

மத்திய ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வேலூர் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கோட்டை சீரமைத்தல், பாதாள சாக்கடை திட்டம், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் இணைப்பு, நவீன அரசின் வாகன நிறுத்துமிடம் அமைத்தல், மழைநீர் கால்வாய் அமைத்தல், புதிய பஸ் நிலையத்தை நவீனமாக மாற்றுதல், கோட்டை அகழி தூர்வாரி சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன .

இப்பணிகளை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் ஆய்வு செய்தார். அப்போது , ஸ்மார்ட் சிட்டியில் தொடங்கப்பட்டபணிகள் குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்காமல் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இப்பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார் .

தொடர்ந்து, வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே உள்ள சாலையில் புதிதாக போடப்படும் ஸ்மார்ட் சாலை பணிகளை ஆய்வுசெய்தார். அப்போது, ஸ்மார்ட்சிட்டி பணிகளின் விவரங்களை மாநகராட்சி கமிஷனர் சங்கரன், ஸ்மார்ட் சிட்டி பொறியாளர் சீனிவாசன் எடுத்து கூறினர் .

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!