வேலூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் வேட்புமனு தாக்கல்.

வேலூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் வேட்புமனு தாக்கல்.
X
வேலூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க வேட்பாளர் பா.கார்த்திகேயன் வேட்புமனு தாக்கல்.

வேலூர் மாவட்டம் வேலூர் சட்டமன்ற தொகுதிக்கு தி.மு.க சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பா.கார்த்திகேயன் இன்று தனது வேட்புமனுவை வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கணேஷிடம் வழங்கினார்.

முன்னதாக தி.மு.க வேட்பாளர் பா.கார்த்திகேயனை ஆதரித்து அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வேலூர் அண்ணா சாலையில் உள்ள தெற்கு காவல் நிலையம் அருகே வேன் மூலம் பரப்புரையில் ஈடுபட்டார். இதனையடுத்து அண்ணாசாலையில் இருந்து வட்டாட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

பா.கார்த்திகேயன் தற்போது வேலூர் தொகுதி எம்.எல்.ஏவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!