வேலூர் மாநகராட்சி அதிமுக வேட்பாளரை காணவில்லை: கலெக்டர் மற்றும் எஸ்.பி.யிடம் புகார்

வேலூர் மாநகராட்சி அதிமுக  வேட்பாளரை காணவில்லை:  கலெக்டர் மற்றும் எஸ்.பி.யிடம் புகார்
X

வேட்பாளரை கண்டுபிடித்து தரக்கோரி கலெக்டரிடம் மனு அளித்த அதிமுகவினர்

வேலூர் மாநகராட்சி 11வது வார்டில் போட்டியிடும் வேட்பாளரை கண்டுபிடித்து தரக்கோரி கலெக்டர் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி.யிடம் அதிமுகவினர் மனு

வேலூர் மாநகராட்சி 11வது வார்டு அதிமுக வேட்பாளர் சுகேந்திரன் தாக்கல் செய்த வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் தேர்தலையொட்டி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில் நேற்று முதல் அவரை காணவில்லை எனவும் பல இடங்களில் தேடியும் செல்போனில் தொடர்பு கொண்டும் தொடர்பு கொள்ள இயலவில்லை எனவும் அதிமுகவினர் கூறினார்.

அமைச்சர் துரைமுருகன் தூண்டுதலின் பேரில் வேட்பாளரை திமுகவினர் விரட்டுவதாகவும், வேட்பாளரின் சகோதரர் மாநகராட்சியில் சுமார் 5 கோடி மதிப்பில் அவர் மேற்கொண்டு வரும் பணிகளை முடக்குவதாகவும் கூறினர்.

மேலும் நிலுவையில் உள்ள தொகையை அளிக்க முடியாது எனவும், இதனையும் மீறி செயல்பட்டால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது

இதனையடுத்து அவரை கண்டுபிடித்து தரக்கோரி வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் அப்பு, வேலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மற்றும் தேர்தல் பார்வையாளர் பிரதாப் வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் ஆகியோரிடம் காணாமல் போன வேட்பாளரை கண்டுபிடித்து தர கோரி புகார் மனு அளித்தனர்

அப்போது அதிமுக வேட்பாளர்கள் பலர் உடனிருந்தனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!