வேலூர் அரசு மருத்துவமனையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கலெக்டர் உத்தரவு

வேலூர் அரசு மருத்துவமனையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கலெக்டர் உத்தரவு
X

வேலூர் அரசு மருத்துவமனையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கலெக்டர் உத்தரவு

வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஆயத்தப்பணிகள் தொடங்க வேலூர் கலெக்டர் உத்தரவு

வேலூர் புதிய கலெக்டராக நியமிக்கப்பட்ட குமாரவேல்பாண்டின் நேற்று மாலை பொறுப்பு ஏற்றார் . இதையடுத்து இன்று வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருவத்துக்கல்லூரி மருத்துவமனையில் திடீரென ஆய்வு செய்தார் .அவருடன் அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் வந்தார் .

அப்போது , மருத்துவக் கல்லூரி டீன் செல்வியிடம் , மருத்துவமனைக்கு நாள்தோறும் வரும் நோயாளிகளின் விவரங்களை கலெக்டர் கேட்டறிந்தார் . மருத்துவமனையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அருகில் உள்ள ஏரியில் கலந்து மாசு அடைவதாக எம்எல்ஏ கூறினார் . இதையடுத்து , மருத்துவமனை வளாகத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான அறிக்கையை தயார் செய்ய அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார் . அந்த அறிக்கையை அரசுக்கு அனுப்பி வைத்து , அனுமதி கிடைத்ததும் , கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்றார் .

தொடர்ந்து , மருத்துவமனைக்கு வரும் சாலையில் குறுகலாக உள்ளதால் , சாலையோரம் உள்ள மின்கம்பத்தை அகற்றி , சாலையை அகலப்படுத்த வேண்டும் என எம்எல்ஏ நந்தகுமார் , கலெக்டரிடம் கூறினார் . அதற்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார் .

இதையடுத்து , மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் கேர் சென்டர்களை ஆய்வு செய்தார். அப்போது, ஆக்சிஜன் சிலிண்டர்களை தினமும் சிறிது நேரம் பயன்படுத்தி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் . மேலும் மருத்துவமனை வளாகத்தில் உள்ள காலியாக உள்ளடங்களில் மரங்கள் மற்றும் மூலிகை செடிகளை வைத்து பராமரிக்க வேண்டும் என்றுதெரிவித்தார் .

ஆய்வின் போது, டிஆர்ஓ பார்த்தீபன், பயிற்சி கலெக்டர் ஐஸ்வர்யா, ஆர்டிஓ விஷ்ணுப் பிரியா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மணிவண்ணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர் . இதைத் தொடர்ந்து வேலூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்ற கலெக்டர், அங்குள்ள கொரோனா கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்தார் .

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!