வேலூர் தொகுதி அமமுக வேட்பாளருக்கு நெஞ்சுவலி

வேலூர் தொகுதி அமமுக வேட்பாளருக்கு  நெஞ்சுவலி
X
வேலூர் தொகுதி அமமுக வேட்பாளர் அப்புபால் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

வேலூர் சட்டமன்ற தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட வேலூரை சேர்ந்த அப்புபால் பாலாஜி என்பவர் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் இன்று தீடீரென நெஞ்சுவலி ஏற்பட்டாதாக கூறி அமமுக வேட்பாளரான அப்பு பால் பாலாஜி வேலூரில் உள்ள சிஎம்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் வேலூர் தொகுதிக்கான வேட்பாளரை மாற்ற அமமுக தலைமை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!