வேலூரில் காவல்துறை பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம்

வேலூரில் காவல்துறை பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம்
X

ஏலத்திற்கு நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள்

வேலூர் நேதாஜி மைதானத்தில் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இன்று ஏலம் விடப்பட்டது

வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் கடத்தல் மற்றும் குற்ற வழக்குகளில் பைக், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் பைக் ஆட்டோ கார் உள்ளிட்ட 369 வாகனங்கள் இன்று வேலூர் நேதாஜி மைதானத்தில் ஏலம் விடப்பட்டது.

வாகனத்தை ஏலம் எடுக்க வந்தவர்களிடம் ரூ.100 நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டு பின்னர் அவர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். ஏ.டி.எஸ்.பி.சுந்தரமூர்த்தி மேற்பார்வையில் வாகனங்கள் ஏலம் நடந்தது.

மதுவிலக்கு வழக்கில் சம்பந்தப்பட்ட வாகனங்களுக்கு ஏலத்தொகையுடன் இருசக்கர வாகனங்களுக்கு 12 சதவீதம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 18 சதவீதம் விற்பனை வரியும் சேர்த்து வசூலித்தனர்.

மேலும் வழக்குகளில் சம்மந்தப்பட்டுள்ள வாகனங்கள் அனைத்திற்கும் ரசீது வழங்கினர். ஏலம் எடுத்த வாகனத்திற்கு உண்டான ரசீதே அவ்வாகனத்தின் உரிமை ஆவணம் என போலீசார் தெரிவித்தனர்.

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!