வாக்குமைய அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு துவக்கம்
வேலூர் மாவட்டத்தில் உள்ள 1783 வாக்குச்சாவடி மையங்களில் 8560 அலுவலர்கள் தேர்தல் நாளன்று பணியாற்ற உள்ளனர். இவர்கள் அன்றைய தினம் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த முதல்நிலை பயிற்சி வகுப்பு வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெற்றது. இதில் வேலூர் சாய்நாதபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறும் பயிற்சி வகுப்பில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
பயிற்சியில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கினார். மேலும் கொரோனா பெருந்தொற்று காலம் என்பதால் கவனமாக பணியாற்ற வேண்டும், அதற்காக உரிய உபகரணங்கள் வழங்கப்படும். அதேபோல் வேலூரில் வெப்பம் அதிகம் இருக்கக்கூடும் என்பதால் பொது மக்கள் பாதிக்காத வகையில் அனைத்து வாக்குப்பதிவு மையத்திலும் நிழற்குடைகள், தண்ணீர் வசதி உள்ளிட்டவற்றை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும் இதுவரை கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு பயிற்சி மையத்திலேயே பரிசோதனை செய்து கோரோனா தடுப்பூசி போடப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu