வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதி போக்குவரத்தில் இன்று முதல் மாற்றம்

வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதி போக்குவரத்தில் இன்று முதல் மாற்றம்
X

வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதி

வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் ஏற்படும் நெரிசலை குறைக்க இன்று முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

வேலூர் மாநகராட்சி முக்கிய பகுதிகளில் ஒன்றான கிரீன் சர்க்கிளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக வேலூரில் இருந்து காட்பாடிக்கு செல்லும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார் ஆகிய வாகனங்கள் கிரீன்சர்க்கிள் பகுதி வழியாக செல்லாமல் மாற்று வழியில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி பாகாயம், தொரப்பாடி, தோட்டப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காட்பாடி சாலை, பழைய பைபாஸ் சாலை வழியாக காட்பாடிக்கு செல்லும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார் ஆகியவை நேஷனல் சர்க்கிளில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே இடதுபுறத்தில் செல்லும் சாலை வழியாக சென்னை-பெங்களூரு சர்வீஸ் சாலையில் செல்ல வேண்டும்.

அங்கிருந்து சிறிது தொலைவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை பாலம் வழியாக பெங்களூரு -சென்னை சர்வீஸ் சாலைக்கு சென்று வழக்கம்போல் பாலாற்று புதிய மேம்பாலம் வழியாக காட்பாடிக்கு செல்ல வேண்டும். வேன், லாரி, பஸ் உள்ளிட்டவை வழக்கம்போல் கிரீன்சர்க்கிள் வழியாக காட்பாடிக்கு செல்லலாம். இந்த போக்குவரத்து மாற்றம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இது தொடர்பாக நேஷனல் சர்க்கிள் பகுதியில் 3 இடங்களில் அறிவிப்பு பலகை வைக்கப்படும் என்று வேலூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தெரிவித்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்