வேலூரில் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு

வேலூரில் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு  ஸ்மார்ட் கார்டு
X

புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகளை வட்டாட்சியர் வழங்கினார்

வேலூரில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளுக்கு புதிதாக விண்ணப்பித்த 1,357 பேருக்கு கார்டுகளை வட்டாட்சியர் வழங்கினார்.

வேலூர் தாலுகாவில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. தற்போது புதிதாக விண்ணப்பிக்கும் நபர்களுக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது.

கடந்த 3 மாதங்களில் வேலூர் தாலுகா பகுதியில் வசிக்கும் பலர் புதிதாக ரேஷன் கார்டு வழங்கக்கோரி ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தனர். ரேஷன்கார்டு பெயர் நீக்கம் உள்ளிட்ட பல்வேறு பரிசீலனைக்கு பின்னர் புதிதாக விண்ணப்பித்தவர்களில் 1,357 ஸ்மார்ட் ரேஷன் கார்டு வேலூர் தாலுகா அலுவலகத்தில் இயங்கும் வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு வந்துள்ளன.

முதற்கட்டமாக 100 பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வேலூர் குடிமைப்பொருள் வட்டாட்சியர் சத்யமூர்த்தி பயனாளிகளுக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கினார். இதில், குடிமைப்பொருள் வருவாய் ஆய்வாளர் வேணுகோபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

புதிதாக விண்ணப்பித்த நபர்களின் செல்போன் எண்ணிற்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு பெற்று கொள்வது குறித்து குறுஞ்செய்தி வரும். அதன்பின்னரே அவர்கள் வட்ட வழங்கல் அலுவலகம் வந்து கார்டை பெற்றுக் கொள்ள வேண்டும். ஒருநாளைக்கு 100 பேர் வீதம் எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும் என்று குடிமைப்பொருள் வட்டாட்சியர்தெரிவித்தார்.

Tags

Next Story