வேலூரில் 8 இடங்களில் ஸ்மார்ட் கம்பங்கள்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
ஸ்மார்ட் கம்பங்கள்
வேலூர் மாநகராட்சியில் 8 இடங்களில் காற்று மாசு, மழையளவு, அவசர தேவைக்கு தொடர்பு கொள்ள ஸ்மார்ட் போல் அமைக்கும் பணி நடந்துவருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர் . ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூர் மாநகராட்சியில் பல்வேறு திட்டப்பணிகள் நடந்துவருகிறது . குறிப்பாக மாநகரின் காட்பாடி ரயில்வே நிலையம், பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், முஸ்லிம் பள்ளி ரவுண்டானா, சத்துவாச்சாரி உள்ளிட்ட 8 இடங்களில் ஸ்மார்ட் போல் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது .
இதில் முஸ்லிம் பள்ளி ரவுண்டானா அருகே மட்டும் ஸ்மார்ட்போல் அமைக்கும் பணிமுழுமையாக முடிந்துள்ளது. இதன் மூலம் , அவசர கால உதவி தேவைப்படும் மக்கள் எளிதாக தகவல் அளிக்க முடியும். அதற்கு ஏற்றவாறு ஸ்மார்ட் போலில் கைக்கு எட்டும் தூரத்தில் மொபைல் போனில் வரும் கால் அழைப்பை அட்டென்ட் செய்யும் வகையில் பட்டன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பட்டனை அழுத்தி பிரச்னையை தெரிவித்தால் , மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் ரூமுக்கு தகவல் சென்றடையும் . அங்கிருந்து உங்களின் அவசர தேவைக்கு ஏற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதுமட்டுமல்லாது ஸ்மார்ட் போல் பகுதியில் வாகன போக்குவரத்து கண்காணிக்கவும், குற்றச்செயல்கள் தடுக்க பிரத்யேகமான 180 டிகிரி சுழல் கேமரா அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 2 ஸ்பிக்கர், 4 சிசி டிவி கேமரா அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வாகனங்களின் பதிவெண்தெளிவாக பார்க்கமுடியும். மேலும், மழையின் போது எந்தளவுக்கு மழை பெய்தது என்ற விவரம் அறிக்கை சார்ந்த விவரங்களையும், அந்த பகுதியில் எந்தளவுக்கு காற்றுமாசடைகிறது என்ற விவரங்களை துல்லியுமாக கண்டறிய முடியும் . அதற்கான தகவல் தொழில்நுட்ப வசதிகளும், இந்த ஸ்மார்ட்போலில் இடம் பெற்றுள்ளது.
இந்த ஸ்மார்ட் போல் மற்றும் பகுதிகளில் அமைக்கும் பணிகள் முடிவடைந்தும், மாநகராட்சி கன்ட்ரோல் ரூமிலிருந்து ஆக்டிவேட் செய்யப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu