தூர்வாரப்படாத கால்வாய்கள், குண்டும் குழியுமான சாலைகள்: நம்ம வேலூர்ல தான்
குப்பைகள் சேர்த்து நீர் செல்ல முடியாத நிலையில் இருக்கும் கால்வாய்
தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் வேலூர் மாநகராட்சி பகுதிகளில் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிகிறது. சாலைகள் சேதமடைந்து சேறும் சகதியுமாக உள்ளது. மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் பல ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் மாநகராட்சி பகுதியில் சிறு மழை பெய்தாலே தெருக்கள் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. அவசர காலத்தில் கூட வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் உள்ளது. சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது.
இதற்கு நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகராட்சி அலுவலகத்தில் புகார் மனுக்கள் அளித்தாலும் அதிகாரிகள் கண்டுகொன்வதில்லை இதனால் மாநகராட்சி நிர்வாகம் மீது மக்களிடையே பெரும் அதிருப்தி நிலவுகிறது
மாநகராட்சியில் முக்கிய வியாபார மையமான மண்டித்தெரு, கிருபானந்தவாரியார் சாலை, காந்திரோடு, சைதாப்பேட்டை பகுதிகள் முழுவதும் தெருக்கள் தோண்டப்பட்டு எங்கு பார்த்தாலும் மண்மேடுகள் காணப்படுவதால், வணிகர்களுக்கு தீபாவளி விற்பனை பாதித்துள்ளது. .
இதனால் வேலூரில் பலகோடி ரூபாய்க்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கடைகளுக்கு செல்லும் பாதை மிகவும் மோசமாக உள்ளதால் அந்த கடைகளில் வியாபாரம் நடைபெறவில்லை. அவர்கள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர். சாலைகளை சீரமைக்கக்கோரி வியாபாரிகள் கோரிக்கை வைத்தும் மாநகராட்சி அலட்சியமாக இருந்து வருகிறது.
அத்துடன், மாநகராட்சி பகுதிகள் முழுவதிலும் உள்ள கால்வாய்கள் தூர்ந்து போய் காணப்படுகிறது. கால்வாயில் குப்பைகள் நிறைந்து பல்வேறு இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தேங்கி காணப்படும் கழிவுநீரில் துர்நாற்றம் வீசுகிறது. டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது.
இது போல சாலை வசதி, கால்வாய் வசதி போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத வேலூருக்கு மாநகராட்சி அந்தஸ்து தராமலே இருந்திருக்கலாம் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
மாநகராட்சி இதற்காவது செவி சாய்க்குமா? என்ற கேள்வி பொதுமக்களிடம் எழுந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu