வேலூரில் ஊரடங்கில் வெளியே வந்தவர்களுக்கு அறிவுரை வழங்கிய காவல்துறையினர்

வேலூரில் ஊரடங்கில் வெளியே வந்தவர்களுக்கு அறிவுரை வழங்கிய காவல்துறையினர்
X

ஊரடங்கில் சுற்றி திரிபவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்த காவல்துறையினர்

வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் வெளியே வந்த பொதுமக்களுக்கு காவல்துறையினர் அறிவுரை வழங்கி அனுப்பினர்

தமிழகத்தில் கொரனா பரவலை தடுக்க அரசு இரவு நேரங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையான இன்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதனால் பொதுமக்கள் வெளியில் செல்லாமல் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு காரணமாக எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் வேலுர் அண்ணா சாலை வெறிச்சோடி காணப்படுகிறது.

ஊரடங்கயும் மீறி பொதுமக்கள் வெளியில் வருபவர்களை காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி கொரானாவின் ஆபத்தை குறித்து அவர்களுக்கு எடுத்துரைத்து அறிவுரை வழங்கினர். வைரஸ் தொற்று பரவுவதால் அரசும் மாவட்ட நிர்வாகமும் தெரிவிக்கும் கருத்துக்களை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் எனவும் கூறினர்.

காட்பாடி விருதம்பட்டு வேலூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போக்குவரத்து காவல்துறையினர் தடுப்பு வேலிகளை அமைத்து தேவையின்றி வாகனங்களில் வரும் நபர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர்.

இதனிடையே ஆந்திராவிலிருந்து வரும் வாகனங்களை மாவட்ட எல்லையான கிறிஸ்டியன் பேட்டை பகுதியில் தடுத்து நிறுத்தி மீண்டும் ஆந்திர மாநிலத்திற்கு அனுப்பி வருகின்றனர் .

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா