வேலூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம்

வேலூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம்
X
வேலூர் காந்தி ரோட்டில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்திய 16 கடைகளுக்கு அபராதம் விதித்த மாநகராட்சி அலுவலர்கள்.

வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள கடைகள் வியாபார நிறுவனங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி வியாபாரிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை காந்தி ரோடு மற்றும் பாபுராவ் தெரு ஆகிய இடங்களில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கடைகளில் 2 வது மண்டல சுகாதார ஆய்வாளர் ஈஸ்வரன் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தினர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய 16 ஓட்டல்,மற்றும் கடைகளுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. இந்தக் கடைகளில் மீண்டும் பிளாஸ்டிக் பயன்படுத்துவது தெரிய வந்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!