ஆரம்ப சுகாதார நிலைய பெண் டாக்டர் கொரோனாவுக்கு பலி

கொரோனாவுக்கு பலியான டாக்டர் ஹேமலதா
வேலூர் அருகே உள்ள அரப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஹேமலதா (வயது 47). வேலூர் சைதாப்பேட்டையில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு டாக்டராக பணியாற்றினார்.
இந்த நிலையில் கடந்த மே மாதம் கடைசி வாரத்தில் ஹேமலதாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியாகியது. இதையடுத்து அவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு கடந்த 43 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் டாக்டர் ஹேமலதாவின் உடல்நிலை திடீரென மோசமானது. அதைத்தொடர்ந்து வேலூரில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.
உயிரிழந்த டாக்டர் ஹேமலதா கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டுள்ளார். ஆனாலும் அவருக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருந்ததாகவும், தொற்றின் பாதிப்பு மிகவும் தீவிரமாக இருந்தால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனாவுக்கு அரசு பெண் டாக்டர் உயிரிழந்த சம்பவம், உடன் பணியாற்றிய டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu