விரிஞ்சிபுரம் பாலாற்றில் உயர்மட்ட மேம்பாலம்: அமைச்சர் எ.வ.வேலு
விரிஞ்சிபுரத்தில் சேதமடைந்த தரைப்பாலத்தை ஆய்வு செய்த அமைச்சர் வேலு
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு விரிஞ்சிபுரத்தில் சேதமடைந்த தரைப்பாலத்தை ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு பலத்த மழை பெய்துள்ளது. ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழை பாலாற்றில் பெருவெள்ளமாக ஓடியதால், விரிஞ்சிபுரம் தரைப்பாலம் உடைந்து சேதம் ஆனது. 322 மீட்டர் நீளமுடைய பாலத்தில் சுமார் 80 மீட்டர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. வெள்ளம் வடிந்த பின்னர் தற்காலிக போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்படும் என்று கூறினார்.
முன்னதாக அவர் வேலூர் மாங்காய்மண்டி அருகே உள்ள நிக்கல்சன் கால்வாயை ஆய்வு செய்தார். ஆய்வின்போது கலெக்டர் குமாரவேல்பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், உதவி காவல் ஆய்வாளர் ஆல்பர்ட் ஜான், வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu