வேலூர் மத்திய சிறையில் 4 மாதங்களுக்கு பிறகு நளினி முருகன் சந்திப்பு

வேலூர் மத்திய சிறையில் 4 மாதங்களுக்கு பிறகு நளினி முருகன் சந்திப்பு
X

முருகன், நளினி

கடந்த 16ம் தேதி முதல் கைதிகளை சந்தித்து பேச உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, நளினி முருகன் சந்தித்து பேசினர்

வேலூர் பெண்கள் தனிச்சிறையில் 4 மாதங்களுக்கு பிறகு நளினி- முருகன் இன்று நேரில் சந்தித்து பேசினர் . முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர் . நீதிமன்ற உத்தரவுபடி இருவரும் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து பேசி வருகின்றனர் . இதற்கிடையில் கொரோனா 2 வது அலை பரவல் காரணமாக சிறையில் உள்ள கைதிகளை, உறவினர்கள் சந்தித்து பேச தடை விதிக்கப்பட்டது .

அதனால் வீடியோ காலில் குடும்பத்தினருடன் பேசி வந்தனர் . நளினியும், முருகனும் வீடியோ காலில் பேசி வந்தனர். இந்நிலையில், கடந்த 16ம் தேதி முதல் சிறையில் உள்ள கைதிகளை சந்தித்து பேச உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, 4 மாதங்களுக்கு பிறகு வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகனை, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெண்கள் தனிச்சிறைக்கு இன்று அழைத்து சென்றனர் . அங்கு இருவரும் ஒரு மணி நேரம் நேரில் சந்தித்து பேசினர். பின்னர் பலத்த பாதுகாப்புடன், முருகன் மீண்டும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் .

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!