வேலூர் மத்திய சிறையில் இன்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேரில் ஆய்வு

வேலூர் மத்திய சிறையில் இன்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேரில்  ஆய்வு
X

வேலூர் மத்திய சிறையில் இன்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேரில் ஆய்வு மேற்கொண்டார்


வேலூர் மத்திய சிறையில் இன்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

வேலூர் மத்திய சிறையில் இன்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முதலில் ஆண்கள் சிறைக்கு சென்று அங்குள்ள அடிப்படை வசதிகள், சிறைத்துறை மருத்துவமனை, கைதிகள் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார். மேலும் சிறையில் நடைமுறைகள், அங்கு நடைபெறும் விவசாயம், தோல் தொழில் ஆகியவை பற்றி கேட்டறிந்தார்.

இதைத் தொடர்ந்து பெண்கள் தனிச் சிறைக்கு சென்ற அமைச்சர் ரகுபதி, பெண் குறவாளிகளிடம் சென்று உணவு முறைகள் முறையாக உள்ளதா என்றும் கேட்டறிந்து சமையல் கூடங்களையும் ஆய்வு செய்தார்.

ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வேலூர் ஆண்கள் சிறையில் 742 பேரும் பெண்கள் சிறையில் 97 பேரும் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள மருத்துவமனை, சமையல் கூடம், கைதிகள் தங்கும் இடம் ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள முருகன்,நளினி, சாந்தன் உட்பட அனைத்து கைதிகளையும் சந்தித்து குறைகளை கேட்டறிந்தோம். முருகன், நளினி இருவரும் தங்களுக்கு நீண்ட நாள் விடுப்பு வழங்க வேண்டும் என கேட்டனர். அவர்களிடம் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தால் 30 நாட்கள் விடுப்பு வழங்க முடியும். அதனை நீட்டிக்கவும் முடியும். ஆனால் நீண்ட நாட்கள் விடுப்பு வழங்க முடியாது. நீண்ட நாட்கள் விடுப்பு குறித்து கோர்ட்டில் மனு தாக்கல் செய்து பெற்றுக்கொண்டால் அதனை செயல்படுத்த தயாராக இருக்கிறோம் என கூறினார்.

மேலும் கூறுகையில், மற்ற கைதிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாக கொடுத்துள்ளனர். வேலூர் சிறையில் ஷூ தயாரிப்பு நெசவுத் தொழில் செய்து வருகின்றனர். இந்தத் தொழிற்கூடங்கள் விரிவாக்கம் செய்யப்படும். வேலூரில் சிறைக் கைதிகளால் பெட்ரோல் பங்க் நடத்தப்படுகிறது. இதேபோல தமிழகத்தில் உள்ள மேலும் 6 இடங்களில் கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க் திறக்கப்படும். சிறையில் கைதிகள் அனைவருக்கும் தகுதி அடிப்படையில் புதிய வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

கிளை சிறைகளில் பழுதான கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டும். புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் உயர் நீதிமன்றம் பரிந்துரை யின் பேரில் தலைமை நீதிமன்றங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சிறையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இவர்களுடன் அமைச்சர் காந்தி,எம்.எல் ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, உதவி கலெக்டர் விஷ்ணு பிரியா, சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி ஜெயில் சூப்பிரண்டு ருக்மணி பிரியதர்ஷினி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!