அரசு அதிகாரிகளுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை

அரசு அதிகாரிகளுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை
X

மக்களை தேடி மருத்துவம் திட்ட துவக்க விழாவில் அமைச்சர் துரைமுருகன்

மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவதில் அரசு அதிகாரிகள் தங்களை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் மாற்றப்படுவார்கள் என அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்களை தேடி மருத்துவம் திட்ட துவக்க விழா மற்றும் உணவு மற்றும் உணவு பொருட்கள் வழங்கும் துறை சார்பாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன், உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் பங்கேற்று பேசினர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், "பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு 100 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என அறிவிக்கப்பட்டு தற்போது 90 நாட்களுக்கு முன்னதாகவே மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகிறது. இருந்தபோதிலும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முழுவதுமாக நிறைவேற்ற ஆட்சி பொறுப்பேற்று ஆறு அல்லது ஒன்பது மாதங்களாவது முடிந்திருக்க வேண்டும். ஆனால் தற்போது தான் ஆரம்ப காலகட்டத்தில் அரசு உள்ளது. எனவே வரும் காலங்களில் மக்களுக்கு அளித்துள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றப்படும்.

கொரானா வைரஸ் தொற்று காரணமாக சில பணிகளை நிறைவேற்றுவதில் சற்று தாமதம் ஏற்படுகிறது. இருந்த போதிலும் தமிழகத்தில் கொரானா வைரஸை முற்றிலுமாக ஒழிக்க முதலமைச்சர் தொடர்ந்து பல்வேறு பணிகளை செய்துவருகிறார். விரைவில் வைரஸ் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்படும்.

மேலும் அரசு அதிகாரிகள் மக்களுக்கு தேவையான பணிகளை உடனுக்குடன் செய்து தர வேண்டும். அரசு அதிகாரிகள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் இல்லையென்றால் மாற்றப்படுவார்கள் என அதிகாரிகளை அவர் எச்சரித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!