சிறுகாஞ்சி ஊராட்சியில் ஒட்டுமொத்த துப்புரவு பணி

சிறுகாஞ்சி ஊராட்சியில் ஒட்டுமொத்த துப்புரவு பணி
X

சிறுகாஞ்சியில் நடைபெற்ற சுகாதாரப்பணிகள்

வேலூர் ஒன்றியம் சிறுகாஞ்சி ஊராட்சியில் ஒட்டுமொத்த துப்புரவு பணியை திட்ட இயக்குனர் ஆர்த்தி தொடங்கி வைத்தார்.

வேலூர் ஊராட்சி ஒன்றியம் 2022-ம் ஆண்டு மாதிரி கிராமமான சிறுகாஞ்சி ஊராட்சியில் ஒட்டுமொத்த துப்புரவு பணி நடைபெற்றது. வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வின்சென்ட் ரமேஷ் பாபு தலைமை தாங்கினார்.

ஒன்றியக்குழு தலைவர் அமுதா ஞானசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜன் பாபு, ஊராட்சி மன்ற தலைவர் தாராரியோஷ்குமார், ஒன்றிய கவுன்சிலர் வள்ளியம்மாள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வினோத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் ஜெயலட்சுமிசவுந்தராஜன் வரவேற்றார்.

ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி பங்கேற்று துப்புரவு பணியை தொடங்கி வைத்தார்.

இதில் 150 துப்பரவு பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்கள் ஈடுபட்டனர். இதில் அலுவலக பணியாளர்கள், வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!