/* */

வேலூர் மாநகராட்சி 2வது மண்டலத்தில் கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெறுகிறது

வேலூர் மாநகராட்சி 2 வது மண்டலத்தில் டெங்கு பரவலை கட்டுப்படுத்த வீடு வீடாக சென்று கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

HIGHLIGHTS

வேலூர் மாநகராட்சி 2வது மண்டலத்தில் கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெறுகிறது
X

வேலூர் மாநகராட்சி 2வது மண்டலத்தில் கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெறுகிறது

வேலூர் மாநகராட்சி 2 வது மண்டலம் சத்துவாச்சாரியில் வீடு , வீடாக டெங்கு பரவலை கட்டுப்படுத்த கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது . வேலூர்மாவட்டத்தில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது . இதனால் தேங்கியிருக்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய்கள் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையில் உள்ளாட்சி அமைப்புகள் தீவிரம் காட்டி வருகின்றன.

அதன்படி கமிஷனர் சங்கரன் உத்தரவின்பேரில், வேலூர் மாநகராட்சியில் 4 மண்டலங்களிலும் வீடுகளில் தண்ணீர் தொட்டிகள், திறந்த நிலையில் இருக்கும் தண்ணீர் டிரம்களில் கொசு மருந்து தெளித்தல், புகை மருந்து அடித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன . அதே போல் தெருக்களில் கழிவு நீர் கால்வாய்கள், தண்ணீர் தேங்கி நிற்கும் தாழ்வான பகுதிகள், பள்ளங்களில் கொசு மருந்தும், மருந்து புகையும் அடிக்கப்பட்டன . மேலும் ஆயில் பந்துகளும் வீப்பட்டன .

இது தவிர வேலூர் பழைய பஸ் நிலையத்தில் பஸ்களிலும், பயணிகள் அமரும் இருக்கைகள், பிளாட்பாரங்களில் லைசால் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடந்தன.

Updated On: 16 July 2021 1:24 PM GMT

Related News