ஆண்களுக்கும் இலவச பேருந்து வசதி கேட்டு மனு
X
ஆண்களுக்கும் இலவச பேருந்து வசதி கேட்டு கலெக்டரிடம் மனு அளித்த இந்து தேசிய கட்சியினர்
By - C.Vaidyanathan, Sub Editor |21 March 2022 8:37 PM IST
ஆண்களுக்கும் இலவச பேருந்து வசதி கேட்டு இந்து தேசிய கட்சியினர் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இந்து தேசிய கட்சியினர் இன்று மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் பெண்களுக்கு இலவச பேருந்து வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதனை போன்று வறுமை கேட்டிற்கு கீழ் உள்ள அனைத்து ஏழை ஆண்களுக்கும் பேருந்தில் இலவச பயணம் மேற்கொள்வதற்கான அங்கீகாரத்துடன் கூடிய இலவச பேருந்து பயணத்தை உறுதி செய்ய வேண்டும். அதே சமயம் பெண்களுக்கு தமிழகம் முழுவதும் செல்வதற்கு இலவச பேருந்து பயணத்தை உறுதி செய்ய வேண்டும்.
இதில் ஆண்கள், பெண்கள் என பாகுபாடு இன்றி உண்மையான சமத்துவத்தை நிலைநாட்டிட வேண்டும் என கூறியுள்ளனர்.
Tags
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu