டாஸ்மாக் கடையில் கையாடல்: சூபர்வைசர் உள்பட 4 பேர் சஸ்பெண்ட்

டாஸ்மாக் கடையில் கையாடல்: சூபர்வைசர் உள்பட 4 பேர் சஸ்பெண்ட்
X

மாதிரி படம்

வேலூரில் டாஸ்மாக் கடையில் ரூபாய் 1 கோடி கையாடல் செய்த சூபர்வைசர் உள்பட 4 பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்

வேலூர் டாஸ்மாக் கடையில் ரூபாய் 1 கோடி கையாடல் செய்யப்பட்டதாக வந்த புகாரின்பேரில் சூபர்வைசர் உட்பட 4 பேர் இன்று அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் உயர் ரக மதுபாட்டில்களை எலைட் எனப்படும் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படுகிறது. இங்கு வார இறுதி நாட்களில் எப்போதும் விற்பனை அதிக அளவில் நடைபெறும். இதேபோன்று வேலூர் காகிதப்பட்டறையில் எலைட் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.

இங்கு பணிபுரியும் ஊழியர்கள் இந்த கடையில் ரூபாய் 1 கோடி வரை கையாடல் செய்ததாக புகார் கூறப்பட்டது. அதன்பேரில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் கடந்த சில நாட்களாக விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் இன்று டாஸ்மாக் சூபர்வைசர் பிரகாஷ் மற்றும் ஊழியர்களான சண்முகம், பாலாஜி, விஜயகுமார் ஆகிய 4 பேரை இன்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர் .

இவர்களில் பிரகாஷ் என்பவர் அதிமுக மாணவரணி நிர்வாகியாக உள்ளார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!