வேலூர் மாவட்டத்தில் கொரானா விதிமுறைகளை கடைபிடிக்க கலெக்டர் வேண்டுகோள்

வேலூர் மாவட்டத்தில் கொரானா விதிமுறைகளை கடைபிடிக்க கலெக்டர் வேண்டுகோள்
X

வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன்  

வேலூர் மாவட்டத்தில் கொரானா தொற்று அதிகரித்து வருவதால், விதிமுறைகளை கடைப்பிடித்து பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க கலெக்டர் வேண்டுகோள்

வேலூர் மாவட்டத்தில் கொரானா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக மாவட்டத்தில் நாளை முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை கடுமையாக்க இருப்பதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன் வேண்டுகோள்.

வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் இன்று மாலை காய்கறி அங்காடிகள், மக்கள் கூடும் இடங்கள் மற்றும் பேருந்துகளில் பொது மக்கள் முக கவசம் அணிகிறார்களா? சமூக இடைவெளி பின்பற்றுகிறார்களா? உள்ளிட்ட கொரானா விதிமுறைகளை கடைபிடிக்கிறார்களா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் கொரானா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், முக கவசம் அணியாமல் பயணம் செய்யக்கூடாது . பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்யக்கூடாது, முக கவசம் அணிய வேண்டும் போன்ற அறிவுரைகளை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

கடைகளில் பொருட்கள் வாங்குபவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து இருக்க வேண்டும் கடைக்காரர்களும் முக கவசம் அணிய வேண்டும். விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

சினிமா தியேட்டர் நகைக் கடைகள் துணிக்கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கூட்டத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது . அனைத்து கடைகள் முன்பும் கிருமிநாசினி வைத்திருக்க வேண்டும் .

கூட்டம் அதிகமாக காணப்படும் பகுதிகளில் ஊரடங்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகத்திற்கு அதிகாரம் உண்டு. எனவே தனியார் நிறுவனங்கள் மற்றும் காய்கறி அங்காடிகள் மக்கள் கூட்டம் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் . கூட்டம் அதிகமானால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!