பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து வேலூரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து வேலூரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
X

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து வேலூரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரை பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா அவதூறாக பேசியதை கண்டித்து வேலூரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

இந்து மத கடவுள்கள், பிரதமர் நரேந்திரமோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோரை பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா அவதூறாக பேசியதை கண்டித்தும், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரியும் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே பா.ஜ.க. இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் எஸ்.எல்.பாபு, மாவட்ட செயலாளர் சரவணக்குமார் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞரணி செயலாளர் ராஜ்குமார், துணைச் செயலாளர் குமார் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன முழக்கம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஓ.பி.சி. மாவட்ட செயலாளர் எஸ்.கே.மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு