கால்நடை துறையில் உதவியாளர் பணி: மாடர்ன் டிரெஸ்சில் மாடுகளை கட்டிய பட்டதாரிகள்

கால்நடை துறையில் உதவியாளர் பணி: மாடர்ன் டிரெஸ்சில்  மாடுகளை கட்டிய பட்டதாரிகள்
X

கால்நடைதுறையில் உதவியாளர் பணிக்கு மாடுகளை அவிழ்த்து கட்டிய பெண் பட்டதாரிகள்

மாடுகளை கையாளும் தேர்வில் மாடர்ன் உடையணிந்த ஏராளமான பட்டதாரிகள் கலந்துகொண்டடு, மாடுகளை கட்டியும் லாவகமாக ஓட்டியும் காண்பித்தனர்.

கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள கால்நடை உதவியாளர் பதவிக்கு நேர்காணல் இன்று வேலூர் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் நடந்தது.

22 பதவிகளுக்கு வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். நேர்காணல் உதவி ஆணையர் வெங்கட்ராமன் மண்டல இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

வருகிற 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளான இன்று 800 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை 400 பேருக்கும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரை 400 பேருக்கும் என 2 வேளையாக நடைபெற்றது.

சான்றிதழ் சரிபார்ப்பு, சைக்கிள் ஓட்டுதல், மாடுகளை கையாளுதல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்தப் பதவிக்கு 10-ம் வகுப்பு அடிப்படைத் தகுதியாகும். ஆனால் இதற்கு விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானவர்கள் பட்டதாரிகள். அதிலும், முதுநிலைப் பட்டதாரிகள், எம்.பி. ஏ., என்ஜினீயரிங் பட்டதாரிகள் போன்றவர்கள் பலர் விண்ணப்பித்திருந்தனர்.

மாடுகளை கையாளும் தேர்வில் டிப்-டாப் உடையணிந்த ஏராளமான பட்டதாரிகள் கலந்துகொண்டனர். டிப்டாப் உடையில் மாடுகளை கட்டியும் லாவகமாக ஓட்டியும் காண்பித்தனர். இதேபோல ஏராளமான இளம்பெண்களும் இதில் கலந்து கொண்டனர். அவர்களும் மாடுகளை கையாண்டும், சைக்கிள் ஓட்டியும் காண்பித்தனர்.

Tags

Next Story
ai in future agriculture