துப்புரவு ஊழியர்கள் வீடு வீடாக குப்பை சேகரிக்காவிட்டால் நடவடிக்கை

துப்புரவு ஊழியர்கள் வீடு வீடாக குப்பை சேகரிக்காவிட்டால் நடவடிக்கை
X

மாதிரி படம்

துப்புரவு ஊழியர்கள் வீடு வீடாக குப்பை சேகரிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வேலூர் சைதாப் பேட்டையில் இன்று காலை குப்பைகள் கொட்டுவதால் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். இதேபோல் மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் கால்வாய்களிலும் காலி இடங்களில் குப்பைகளை கொட்டுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

வேலூர் சேண்பாக்கம் பகுதியில் இன்று காலை மேயர் சுஜாதா மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது மாநகராட்சி ஊழியர்கள் சரியாக வீடுவீடாக வந்து குப்பைகள் சேகரிப்பது இல்லை. இதனால் பலர் தெருக்களில் குப்பைகள் கொட்டுகின்றனர். சுகாதார சீர்கேடு ஏற்பட இது காரணமாக அமைகிறது என புகார் தெரிவித்தனர்.

அப்போது கமிஷனர் அசோக்குமார் மாநகராட்சியில் துப்புரவு ஊழியர்கள் கண்டிப்பாக வீடு வீடாக சென்று தினந்தோறும் குப்பைகளை சேகரிக்க வேண்டும்.குப்பைகள் சரியாக சேகரிக்காத தெருக்களில் மட்டுமே பொதுமக்கள் குப்பைகளைக் கொட்டுகின்றனர்.

சுகாதார அலுவலர்கள் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்கள் இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். வீடு வீடாகச் சென்று குப்பைகள் சேகரிக்கும் பணியில் ஈடுபடாத துப்புரவு ஊழியர்கள் மற்றும் சுகாதார அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

Tags

Next Story
ai marketing future