15 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை: காதல் கணவன் மீது போக்சோ வழக்கு

15 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை: காதல் கணவன் மீது  போக்சோ வழக்கு
X

மாதிரி படம் 

வேலூர் அரசு மருத்துவமனையில் 15 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. காதல் கணவன் மீது போக்சோ வழக்கு பதிந்து போலீசார் விசாரணை

வேலூர் அரசு மருத்துவமனையில் 15 வயதே ஆன பள்ளி சிறுமி ஒருவர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் . இந்த விவகாரத்தில் அவரது கணவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

வேலூர் வசந்தபுரத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி, நிறைமாத கர்ப்பிணியாக இச்சிறுமி பிரசவத்துக்காக சில நாட்களுக்கு முன் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . அங்கு அவருக்கு நேற்று இரவு அழகான ஆண் குழந்தை பிறந்தது . அவரது வயது குறித்து சந்தேகமடைந்த டாக்டர்கள் நடத்திய மருத்துவ பரிசோதனை மற்றும் விசாரணையில் அவருக்கு 15 வயதுதான் ஆகிறது என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர் .

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது . அதன் பேரில் போலீசார் மருத்துவ மனைக்கு சென்று , குழந்தையுடன் இருந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினர் . இதில் சிறுமி 10 ம் வகுப்பு படித்து வருவதாகவும், அதே பகுதியை சேர்ந்த வசந்த் ( 19 ) என்ற வாலிபர் காதலித்ததாகவும் தெரிய வந்தது. பெற்றோருக்கு தெரியாமல் சாத்துமதுரையில் உள்ள முருகன் கோயிலில் தாலி கட்டி அடுக்கம்பாறையில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதனால் சிறுமி கர்ப்பமாகி குழந்தை பெற்றெடுத்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக வேலூர் அனைத்து மகளிர் போலீசார் , வசந்த் மீது மைனர் பெண்ணை கர்ப்பமாக்கியதாக போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

காதல் வலையில் வீழ்ந்த 15 வயது சிறுமி குழந்தை பெற்றெடுத்தது பெரும் அதிர்ச்சியாக உள்ளது . குழந்தை திருமணங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் அரசு, அவ்வாறு திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. ஆனால் இதை மீறி பல இடங்களில் குழந்தை திருமணங்கள் நடந்து வருவது வேதனை தருவதாக உள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!