அமமுக பிரமுகர் கொலை வழக்கில் 3 பேர் சரண்டர்

அமமுக பிரமுகர்  கொலை வழக்கில் 3 பேர் சரண்டர்
X
திருப்பத்தூரில் அமமுக பிரமுகர் வெட்டிகொலை செய்யப்பட்ட வழக்கில், ஏற்கனவே 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந் நிலையில் தேடப்பட்ட 3 பேர் வேலூர் நீதிமன்றத்தில் சரண்டர் ஆனார்கள்.

திருப்பத்தூர் கௌதமபேட்டை பகுதியை சேர்ந்தவர் மாவட்ட அமமுக மாணவரணி செயலாளரான வானவராயன்(30). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த திமுக பிரமுகரான சங்கர் என்பவருக்கும் இடையேயான முன்விரோதம் காரணமாக கூலிப்படை மூலம் கடந்த 15.02.2021 ம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக சங்கர் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த பெண்கள் உட்பட 7 பேரை திருப்பத்தூர் காவல் துறையினர் கைது செய்தனர்.


மேலும் தலைமறைவாக இருந்த கூலிப்படையை சேர்ந்தவர்களை காவல் துறை தேடி வந்த நிலையில் 3 பேர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டர். மேலும் தலைமறைவாக இருந்த கௌதமபேட்டையை சேர்ந்த பிரபா(எ) பிரபாகரன்(39), இவனது தம்பி அரவிந்தன்(26), ரபீக் (எ) நந்தகுமார்(25) ஆகியோர் இன்று (22.02.2021) வேலூர் மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 1-ல் சரணடைத்ததனர். இதனையடுத்து 3 பேரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் வரும் 25-ம் தேதி திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நீதிபதி உத்தர விட்டார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!