போக்குவரத்து தொழிலாளர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்

போக்குவரத்து தொழிலாளர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்
X

வேலூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் நாமம் போட்டு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வேலூர் மாவட்டத்தில் பெரும்பாலான அரசு பேருந்துகள் ஓடவில்லை. இந்நிலையில் வேலூர் கிருஷ்ணா நகர் போக்குவரத்து பணிமனை முன்பு இன்று காலை போக்குவரத்து தொழிலாளர்கள் நாமம் போட்டு பொதுமக்களிடம் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவிந்தா, கோவிந்தா என தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். அரசு தங்களது கோரிக்கைகளை காது கொடுத்து கேட்கவில்லை. அதனால் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!