கல்லூரி மாணவர்களுக்கு இலவச டேட்டா கார்டு வழங்கல்

கல்லூரி மாணவர்களுக்கு இலவச டேட்டா கார்டு வழங்கல்
X

கல்லூரி மாணவர்களுக்கு இணைய வழி மூலம் கல்வி பயில அரசு அறிவித்த 2 ஜிபி இலவச டேட்டா சிம் கார்டுகளை வேலுார் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வழங்கினார்.

வேலூர் தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் பொறியியல் கல்லூரி மற்றும் பல் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்று காலத்தில் மாணவர்கள் இணையவழி மூலம் கல்வி பயில அரசு அறிவித்த விலையில்லா 2 ஜிபி இலவச டேட்டா சிம் கார்டு வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

இதில் அவர் பல்வேறு நிறுவனங்களின் சிம் கார்டுகளை மாணவர்களுக்கு வழங்கினார். வேலூர் மாவட்டத்தில் உள்ள பொறியியல், பல்தொழில்நுட்பம் மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் பயிலும் 17,337 மாணவ, மாணவிகளுக்கு சிம் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!