வேலூர்- சித்தூர் மாவட்ட ஆட்சியர்கள் தேர்தல் ஆலோசனை

வேலூர்-  சித்தூர் மாவட்ட ஆட்சியர்கள் தேர்தல் ஆலோசனை
X

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி வேலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் சித்தூர் மாவட்ட ஆட்சியர்கள் இடையே ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

2021 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலையொட்டி இந்திய தேர்தல் ஆணையம் வழிகாட்டுதலின்படி தமிழக -ஆந்திரா மாநிலங்களுக்கு இடையே சட்டம் ஒழுங்கு மற்றும் தேர்தல் நேரத்தில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சித்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், எஸ்பி செல்வகுமார், சித்தூர் மாவட்ட ஆட்சியர் ஹரிநாராயணன் மற்றும் எஸ்.பி செந்தில்குமார் மற்றும் இரு மாவட்ட உதவி ஆணையர் கலால் ஆகியோர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் சித்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பிறகு வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலையொட்டி அண்டை மாநிலத்தையொட்டிய மாவட்டங்களுடன் ஆலோசனை நடத்தும்படி அரசு கூறியதை அடுத்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக தமிழக-ஆந்திர எல்லையில் அமைந்துள்ள சித்தூர் பகுதியில் இருந்து தேர்தல் சமயத்தில் வாகன சோதனை சாவடியை அதிகப்படுத்தி வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும், சட்டவிரோத மது கடத்தலை தடுக்க வேண்டும், குற்ற வழக்கில் உள்ளவர்களை கைது செய்யவோ அல்லது கண்காணிக்கவோ வேண்டும், சட்டவிரோத பண பரிவர்த்தனையை தடுக்க வேண்டும் என்பவற்றுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கோரி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என கூறினார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil