தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
X

வேலூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 3 லட்சம் மதிப்பிலான பிளாட்டிக் பொருட்கள் மாநகராட்சி அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூர் மாநகராட்சி இரண்டாம் மண்டலத்திற்குட்பட்ட ஆற்காடு சாலை காகிதபட்டறையில் உள்ள ஒரு கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கடையில் இருந்து லாரியில் ஏற்றப்பட்டு வந்துள்ளது. இதை அவ்வழியாக ரவுண்ட்ஸ் சென்ற மாநகராட்சி ஆணையர் சங்கரன் சந்தேகத்தின் பேரில் ஆய்வு செய்தார்.

அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அதன் மதிப்பு சுமார் ரூ. 3 லட்சம் அளவுக்கு இருக்கும் என்றும் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட கடைக்கு சீல் வைக்கப்பட்டு பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
ai and future of education