கொரோனா சான்று வழங்க தாமதம்- அரசு மருத்துவமனை முற்றுகை

கொரோனா சான்று வழங்க தாமதம்- அரசு மருத்துவமனை முற்றுகை
X

இராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா சான்று வழங்குதில் தாமதமானதால் வேலூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

நாளை (15 ம் தேதி) திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் இந்திய இராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ள கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் என்பதால் ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்க செல்லும் இளைஞர்கள் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சோதனை கொடுத்துள்ளனர். ஆனால் சோதனை முடிவு இரவு ஆகியும் கொடுக்கப்படவில்லை என்றும் இதனால் தாங்கள் ஆள்சேர்ப்பு முகாமிற்கு செல்வது தடைபடக்கூடும்.

எனவே தங்களுக்கு உடனடியாக கொரோனா இல்லை என்ற சான்றிதழை வழங்கக்கோரி சுமார் 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் தாலுகா காவல் துறையினர் மருத்துவமனை நிர்வாகத்திடமும், போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு சிலருக்கு இரவும், மற்றவர்களுக்கு நாளை காலையும் சான்று வழங்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!