உழவர் சந்தை , வாரச்சந்தை இயங்க அனுமதி இல்லை கலெக்டர் தகவல்

உழவர் சந்தை , வாரச்சந்தை இயங்க அனுமதி இல்லை  கலெக்டர் தகவல்
உழவர் சந்தை , வாரச்சந்தை இயங்க அனுமதி இல்லை கலெக்டர் தகவல்

வேலூர் கலெக்டர் ( பொறுப்பு ) பார்த்தீபன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது : வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2 ம் அலை தாக்கம் ஏப்ரல் 1 ம்தேதி முதல் அதிகரித்து வந்த நிலையில் , கடந்த மாதம் அதிகபட்சமாக 753 பேருக்கு தொற்று ஏற்பட்டது . அதனை தொடர்ந்து ஏப்ரல் 24 ம்தேதி முதல் தளர்வுகள் அற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் , ஊரடங்கு நடவடிக்கைகள் காரணமாகவும் , அனைத்து துறை அலுவலர்களின் தொடர்பணி காரணமாகவும் பொதுமக்களின் ஒத்துழைப்பு காரணமாகவும் கடந்த 10 நாட்களாக கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்துள்ளது . மாவட்டத்தில் கடந்த 45 நாட்களில் குறைந்தபட்சமாக நேற்று 209 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது .

தற்போது தமிழக அரசு வரும் 14 ம்தேதி வரை தளர்வுகளை வழங்கி உத்தரவிட்டுள்ளது . காய்கறி மொத்த விற்பனையானது வழக்கம்போல் , மாங்காய் மண்டி மைதானத்தில் தொடர்ந்து நடைபெறும் . புதிய மீன் மார்க்கெட்டில் மொத்த விற்பனை மட்டுமே அனுமதிக்கப்படும் . சில்லரை விற்பனைக்கான கடைகள் அருகிலுள்ள தற்காலிக சித்தூர் பஸ் நிலையத்தில் செயல்படும் .

தனியாக செயல்படும் மளிகை, பலசரக்குகள், பழங்கள், பூக்கள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம் . உழவர் சந்தைகள் மற்றும் பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடி பொருட்களை வாங்கும் வகையில் அனைத்து வகையான சந்தைகளும் இயங்க அனுமதி கிடையாது . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது .

Tags

Read MoreRead Less
Next Story